Posts

Showing posts from September, 2009
குறுந்தொகையில் செலவழுங்கல் வே. அழகுமுத்து சங்கத் தமிழ் அகப்பொருள் நூல்களுள் குறுந்தொகை ‘நல்ல குறுந்தொகை’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. அகத்துறை சார்ந்த ஒழுக்கங்கள் இதன்கண் இடம்பெற்ற நானூறு பாடல்களிலும் பதிவாகியுள்ளன. பாடல்கள் அளவில் சிறிதாயினும் (அடிவரையறை)பொருட் சிறப்பில் குறைவிலாப் பாடல் தொகுதி கொண்டது இந்நூல். தமிழில் இலக்கியக் கொள்கை வகுக்கப்படுவதற்குப் பெரிதும் துணை செய்யும் தொல்காப்பிய இலக்கண ற்பாக்களுக்குப் புலவருலகம் குறுந்தொகைப் பாடல்களைச் சான்றாகக் காட்டுவது இந்நூற் சிறநூப்பைப் புலனாக்கும். அகப்பொருள் துறைகள் பல இந்நூற் பாடலில் பதிவாகியிருப்பினும் ‘ஒரு துறை’ விளக்கமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளதால் ‘செலவழுங்கல்’ என்னும் துறையொன்றே பகுதிப் பொருளாக (Partial) விளக்கப் பெறுகின்றது. தலைவன் பிரிவு ‘ ஆற்றொணாத்துயர்’ என்ற அளவுக்குத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகின்றது. பிரிவுத் துயர் மிகுதிப்படினும் தலைவி ஆற்றியிருக்க வேண்டும் என முல்லை நிலத்தொழுக்கம் வற்புறுத்துகிறது. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்லரவு வாழ்வார்க் குரை என்னும் குறள், பிரிவால் இறந்து படுவாள் தலைவி என...

மீதமிருக்கிறது

சேர்வதற்காகவும் பிரிவதற்காகவும் அமையும் பயணங்களில் வசதியற்ற வசந்தம் களும் வந்துதான் போகிறது… வாழ்வதாகவே வைத்துக்கொள்வோம்…., வியப்பிற்கா.! இறப்பிற்கா..!? பல பயணங்கள் நம் கூடவே வருகிறது வாழ்கையை ஒன்றிணைக்கும் ஒரு சில பயணங்களைக் காட்டி…. பரவா இல்லை பார்த்துவிட்டால் புண்ணியம்தான் என்றிருந்த கண்களுக்கு பார்க்கத் தெரிந்த பாக்கியம் கிடைக்கவில்லை. கடற்கரைக்கு போவதற்கு காரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காரணம் சொல்லிக்கொள்ளாத கடற்கரை அழகை பார்க்க முயற்சிக்கு….! என் தாய் தந்தை கொடுத்துவிட்ட உயிரும் உடலும் மீதமிருக்கிறது. பழக்கப் படுத்திக்கொள்ள விரும்பும் நம் வாழ்க்கைக்காக… ஒவ்வொரு நொடியும் பழக்கமாகிவிடுகிறது எதிர்வரும் நொடியின் இறந்த காலத்தை எண்ணாமல்….

கவிதை

வாசனை தென்றல் தீண்டுவதால் வசந்த கால பூக்கள் சிந்தும் பருவ வாசனை மழைப் பெய்யலில் மனித மனங்களை நினைக்கும் போதெல்லாம் நிரம்பிக்கொள்ளும் மண்வாசனை கன்று ஊட்டியபின் கரந்து எடுத்த பசும்பாலின் வாசனை முற்றியும் சந்தைக்கு வராத முக்கனியின் வாசனை இதனை எல்லாம் மறக்கடிக்கும் அவளின் வாசனையின் தொலைந்து போய்விடுகிறேன் நான் ….