கவிதை
வாசனை
தென்றல் தீண்டுவதால்
வசந்த கால பூக்கள் சிந்தும்
பருவ வாசனை
மழைப் பெய்யலில்
மனித மனங்களை
நினைக்கும் போதெல்லாம்
நிரம்பிக்கொள்ளும்
மண்வாசனை
கன்று ஊட்டியபின்
கரந்து எடுத்த
பசும்பாலின் வாசனை
முற்றியும் சந்தைக்கு வராத
முக்கனியின் வாசனை
இதனை எல்லாம்
மறக்கடிக்கும்
அவளின் வாசனையின்
தொலைந்து போய்விடுகிறேன் நான்….
Comments
Post a Comment