குறுந்தொகையில் செலவழுங்கல்
வே. அழகுமுத்து
சங்கத் தமிழ் அகப்பொருள் நூல்களுள் குறுந்தொகை ‘நல்ல குறுந்தொகை’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. அகத்துறை சார்ந்த ஒழுக்கங்கள் இதன்கண் இடம்பெற்ற நானூறு பாடல்களிலும் பதிவாகியுள்ளன. பாடல்கள் அளவில் சிறிதாயினும் (அடிவரையறை)பொருட் சிறப்பில் குறைவிலாப் பாடல் தொகுதி கொண்டது இந்நூல். தமிழில் இலக்கியக் கொள்கை வகுக்கப்படுவதற்குப் பெரிதும் துணை செய்யும் தொல்காப்பிய இலக்கண ற்பாக்களுக்குப் புலவருலகம் குறுந்தொகைப் பாடல்களைச் சான்றாகக் காட்டுவது இந்நூற் சிறநூப்பைப் புலனாக்கும். அகப்பொருள் துறைகள் பல இந்நூற் பாடலில் பதிவாகியிருப்பினும் ‘ஒரு துறை’ விளக்கமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளதால் ‘செலவழுங்கல்’ என்னும் துறையொன்றே பகுதிப் பொருளாக (Partial) விளக்கப் பெறுகின்றது.
தலைவன் பிரிவு ‘ ஆற்றொணாத்துயர்’ என்ற அளவுக்குத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகின்றது. பிரிவுத் துயர் மிகுதிப்படினும் தலைவி ஆற்றியிருக்க வேண்டும் என முல்லை நிலத்தொழுக்கம் வற்புறுத்துகிறது.
என்னும் குறள், பிரிவால் இறந்து படுவாள் தலைவி என எச்சரித்துத் தலைவன் பிரிவைத் தடுக்கிறது. இவ்வாறு பிரிவைத் தடுக்கும் உத்திகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளமை குறித்து இக்கட்டுரை அமைகிறது.
துறை விளக்கம்
தலைவியைப் பிரியும் தலைவனது போக்கினைத் தடுக்கப் புலவர்கள் கையாளும் உத்திமுறைகள் அனைத்தும் ‘செலவழுங்கல்’ என்னும் துறை சார்ந்தனவாகும். செலவு என்பது பிரிந்து செல்லுதல் என்னும் தொழிற்பெயர். ‘அழுங்கல்’ என்பது தடுத்தல் என்னும் தொழிற்பெயர். இவ்விரு சொற்களும் அகராதிகளில் இடம் பெற்றுள்ளன. அழுங்கல் என்பதற்கு வாய்விட்டழுதல், ஒளிதல், மிக வருந்தல், இரங்குதல், ஒலித்தல், கெடுதல், தாழ்தல், தாமதித்தல், சந்தித்தல், அஞ்சுதல், அலைதல், அழுந்தல், சோம்பல், துன்பப்படுதல் உருவழிதல்2 என்னும் பொருள்கள் சுட்டப்படுகின்றன. அபிதான சிந்தாமணியில், “நிலவு போல ஒளிவிடும் வேலினையும் பெரிய மேம்பாட்டினையும் உடையவன் உயர்ந்த மூங்கிலியை வழியிடைப் போவானாக முன்னே நிச்சயத்துப் போக்கு ஒழிந்த்து”3 எனக் கூறப்பட்டுள்ளது.
தலைவன் தலைவியிடமிருந்து பிரியாதிருத்தல் (To desist from parting from one’s love)
வெளியிற் செல்லவேண்டும் என்ற முன்னர் உறுதி
செய்ததைத் தவிர்த்தது4
என்னும் பொருளைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சுட்டுகிறது. இவற்றை நோக்கச் செலவழுங்கல் என்பது பிரிவு தாமதப்படுதல் என்னும் பொருளையே தருகின்றது. தலைவன் பிரிவு எண்ணிய நேரத்தில் அதனைத் தடுத்தல் எனவும் கூறலாம். பல்வேறு காரணங்களைக் கூறி அப்போதைக்குத் தலைவன் பிரிவு தடுக்கப்படுகின்றது. தொல்காப்பியர் இதனை,
செலவிடை யழுங்கல் செல்லாமை அன்றே
அன்புறை குறித்த தவிர்ச்சி யாகும்5
என்கிறார். இளம்பூரணர் செலவழுங்கல் என்பது தலைவன் வேறெங்கும் செல்லாதிருத்தல் என்றே பொருள் கொள்கின்றார். நம்பியகப் பொருள்,
ஓதல் முதலா ஓதிய ஐந்தினும்
பிரிவோன் அழுங்கற்கும் உரியன வாகும்6
எனக் கூறுகின்றது. செலவழுங்கல் நிகழும் சூழல்களை வ.சுப. மாணிக்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்;
காதலர்களுக்குப் பிரிதல் என்பது முகவாட்டமும் உயிர் வாட்டமும் தரும் கொடுஞ்செயலாகும். பருவத்தாரின் இம் மனநிலை பருவம் வாராதார்க்குத் தோன்றாது ; பருவம் கழித்தார்க்கோ மறந்து போகும். “உயிர்த்தவச் சிறிது காமமோ பெரிது” (குறுந்:18) என்றபடி, தலைவி ஆழ்ந்து அகன்று அடங்கிய காமச் செறிவு உடையவள், நம் பிரிவு அறிய நலனொடு சிறந்த நற்றோள்” (அகம்.41) என்னுமாறு, பிரிவென்ற ஒரு நிலையுண்டு என்பதையே அறியாதவள்; இம்மடமகளின் ஒப்புதலின்றிப் பிரிந்து செல்லல் தலைவனுக்கு இயலாத, கூடாத காரியம். மின் விளக்கனைய பெண்மை மெல்லியல் என்றும் எண்ண அதிர்ச்சி தாங்காதது என்றும் உணர்ந்த தலைவன் மெத்தென்ற நயப்பாடுகளால் பிரிவுக் குறிப்பைத் தலைவி உணரச் செய்வாள்7
என்பது அவர் கருத்து. தலைவனின் பிரிவைத் தாங்கமுடியாத தலைவி தலைவன் புறப்படும் நேரத்தில் கீழ்க்காணும் மெய்ப்பாடுகளைக் காட்டித் தடுத்ததாகக் கூறுவார் மு.வரதராசனார்;
தலைவன் பிரியப்போகும் நேரத்தில் அவள் விட்ட பெருமூச்சின் வெப்பம் மலரைவாடச் செய்தது. மலர் வாடி அழகு இழந்ததைக் கண்டான் கணவன். “மலர் வாடுமாறு அவ்வளவு வெப்பம் இவளுடைய மூச்சில் இருக்குமாயின், உள்ளத்தின் பெருந்துயரம் எத்தகையது” என உணர்ந்து உருகினான். பிரிந்து செல்லும் முயற்சியைக் கைவிட்டான். “உடன் உள்ள போதே இவ்வாறு வருந்துகின்றவன், பிரிந்து செல்வோமாயின் உயிர் வாழ்தல் அரிதே” என்று எண்ணத் தன் பயணத்தை நிறுத்தி விட்டான் (அகம்.5)8
என்பது செலவழுங்கல் மெய்ப்பாட்டின் வழி உணர்த்தப்படும் என்பதை உறுதி செய்கிறது.
‘ ஐங்குறுநூறு’ உரை எழுதிய அ. மாணிக்கனார்,
‘செலவு’ தலைவியைப் பிரிந்து செல்லுதல், ‘அழுங்குவித்தல்’என்பது தவிர்க்குமாறு செய்தல்; தடுத்தல் என்றும், தலைவன் செல்ல இருக்கும் செலவைத் தடுத்து நிறுத்துவது செலவழுங்குவித்தது 9
என்று ஓதலாந்தையார் பாடிய செலவு அழுங்குவித்த பத்திற்குத்துறை விளக்கம் தருகிறார். மேலும் தலைவன் பிரிவு தலைவிக்குத் துயர் தருகிறது. அத்துயர் நீங்குவதற்காகவே இத்துறை நிகழ்தாகக் கூறுகிறார்.
செலவழுங்கல் இடம்பெறும் திணை
செலவழுங்கல் துறை பாலைப் பாடல்களில் வருவதாகக் கூறப்படுகின்றது. குறுந்தொகையிலும் பாலைத்திணையில் இப்பாடல்கள் நிறைந்துள்ளன. பிரிவு என்பது தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும். அவ்வாறு செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப்பிரிவுக்கு நிமித்தமாதலின் பாலையாயிற்று என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருவார்10 என்பது தொல்காப்பியக் கற்பியல் பகுதி உரையில் வெள்ளைவாரணர் கூறுவதாகும்.
செலவழுங்கல் நிகழுமிடங்கள்
செலவழுங்கல் இரண்டு இடங்களில் நிகழுவதாக அமைந்துள்ளது. இல்லத்தின் கண்ணும் இடைச்சுரத்தின் கண்ணும் பொதுவாக நிகழ்வது என்பது தமிழர் மரபாகும். இதனை,
இல்லத் தழுங்கலும் இடைச்சுரத் தழுங்கலும்
ஒல்லம் அவற்கென உரைத்திசி னோரே11
என்கிறார் அகப்பொருள் உரையாசிரியர் ஒருவர்.
செலவழுங்கல் கூற்று நிகழ்த்துவோர்
சங்க இலக்கயங்களில் கூற்று முறைகளில் கருத்து உரைப்பது மரபாக்க கையாளப்படுகிறது. அதுபோலச் செலவழுங்கலும் கூற்று அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. தலைவி, தோழி, கண்டோர் ஆகியோர் கூற்றுக்களில் செலவழுங்கல் வெளிப்பட்டுள்ளது. செலவழுங்கல் இவ்வாறு கூற்றுக்களாக வராமல் செயலாலும் மெய்ப்பாடுகளாலும் நிகழ்வதாகவும் காணப்படுகிறது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குறுந்தொகையில் தோழியின் கூற்றாகச் செலவழுங்கல் ஒரு (363) பாடலிலும், தனது போக்கை நிறுத்திக் கொள்ளுமாறு தலைவனே கூறுமிடங்கள் எட்டுப்பாடல்களிலும் (63, 71, 151, 168, 256, 267, 274, 347) தலைவியின் கூற்றாக இரண்டு பாடல்களிலும் (20,27) இடம்பெற்றுள்ளது.
செலவழுங்கல் நிகழக் காரணம்
தலைவன் பிரிகிறான் என அறிந்த தலைமகள் மிகவும் வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் தலைவியைத் தேற்றுவது ஆடவர்க்குக் கடன். அதுபோலத் தலைவன் பிரிய எண்ணும்போது அவன் நெஞ்சே அவனை வருத்துகின்றது. அதனையும் தேற்றிக் கவலையை ஒழித்து இன்பத்துடன் வாழ வேண்டிய பொறுப்பும் அவனிடம் உள்ளது. அவன் நெஞ்சத்தைத் தேற்றும் சூழலிலும் தன் செலவை நிறுத்திக் கொள்கிறான். தலைவியைப் பார்த்துக் காட்டுவழிச் செல்லும் தலைவன் இப்பிரிவு ஆகாதென இடைச்சுரத்துக் கண்டோர் கூறுங்கால் அவன் போக்கினை நிறுத்துவான். நம்பியகப் பொருள் பின்வருமாறு செலவழுங்கல் தோன்றுவதைக் குறிக்கிறது.
தலைவலி தன்னையும் தன்மனந் தன்மையும்
அலமரம் ஒழிந்தற் கழுங்குவ நல்லது
செல்வத் தோன்றல் சொல்லான் அல்லன்12
என்பது அகப்பொருள்.
குறுந்தொகையில் செலவழுங்கல் துறை பாடிய புலவர்கள்
பதினொரு புலவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாடல் வீதம் பாடியுள்ளனர். இப்பதினொன்றனுள் ஒரு பாடலின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது (பா.256). 27 ஆம் பாடலின் ஆசிரியர் பெயர் சில பதிப்புகளில் மாறி இடம் பெற்றுள்ளது. ‘வெள்ளிவீதியார்’ என்ற பெயர் கொல்லனழகி என்றும் சொல்லப்பட்டுள்ளது. கொல்லனழிசி என்ற பெயரை நச்சினார்க்கினியர் தொல். பொருளதிகார உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனால் இவ்விரு பெயர்களும் ஒன்றெனத் துணிய இடனுண்டு. வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர் ஒருவரின் பாடலொன்று (27) இத்துறையில் அமைந்துள்ளது. கோப்பெருஞ்சோழன் (20) கொல்லனழிசி (27) உகாய்க்குடிக்கிழார் (63), கருவூர் ரோத ஞானி (71), தூங்கலோரி (151), சிறைக்குடியாந்தையார் (168), காலறிக் கடைகையார் (267), உருத்திரன் (274), சேந்தன் கண்ணன் (347), சொல்லூர்க் கொற்றன் (363) ஆகியோர் பாடல் பாடிய புலவர் ஆவர்.
கூற்றுக்கள் : செலவழுங்கல்
செலவழுங்கல் செயல் நிகழுவது பாத்திரங்களின் கூற்றுக்களில் இடம் பெறுகிறது. தோழி, தலைவன், தலைவி ஆகியோர் கூற்றுக்களின் வழியாக இதனை அறியமுடிகிறது. குறுந்தொகையில் செலவழுங்கல் நிகழும் பதினொரு பாடல்களும் இம்மூவரின் கூற்றுக்களாகவே இடம் பெற்றுள்ளன. முதற்கண் வரும் குறுந்தொகை 27 ஆம் பாடல் தோழி கூற்று மூலம் செலவழுங்கலை வெளிப்படுத்துகிறது.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணிஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே13
என்ற அப்பாடல் தலைவனைப் பார்த்துத் தோழி கூறியதாகும். பால் கன்றுக்குப் பயன்படாமல் நிலத்தில் கொட்டியது போலத் தலைவியின் அழகு தலைவனுக்குப் பயன்படவில்லை எனக் கூறியதனால் தலைவன் தன் செலவை நீக்கினான். கன்றும் உண்ணாமல் கலத்தினும் இல்லாமல் வீணாகக் கழந்த பாலைப் போலத் தலைவியின் இளமை தலைவனுக்கும், தலைவிக்கும் பயன்படவில்லை என்பதாம்.
தலைவன் தன் செலவினை எண்ணிக் கலங்குகிறான். தலைவியை விட்டுப் பிரிந்தால் அவள் மிக வருந்துவாள் என வருந்திப் போக்கினைத் தவிர்த்துக் கொள்கிறான்.
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
பெருந்தோ ணுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே14
என்பது தலைவியின் சிறப்பைக் கூறுகின்றது. இவளைப் பிரியாது தங்கினால் செல்வத்துப் பெறலாம் எனத் தன் நெஞ்சினை நோக்கிக் கூறித் தன் பிரிவைத் தவிர்த்துக் கொண்டான் எனப் பாடுகிறார் புலவர். தலைவன் தன் நெஞ்சினை முன்னிலைப்படுத்திக் கூறியது இது.
பாலை வழியின் கடுமையை நினைந்து தலைவன் கலங்கியதாகவோ, தயங்கியதாகவோ எந்தப் பாட்டிலும் கூறப்படவில்லை. அவ்வாறு கூறின் அது தலைவனுடைய ஆண்மைக்கு இழுக்கு ஆகும் என்றே புலவர் கருதித் தவிர்த்தனர். பாலையின் கடுமைக்கு அஞ்சாத தலைவன், தலைவியைப் பிரிவதற்கு அஞ்சிக் கலங்கியிருக்கிறான்; தயங்கியிருக்கிறான். இவ்வாறு கூறும் பாட்டுக்கள் பல உள்ளன. காட்டு நெறியில் வளத்தை எதிர்பார்த்து வாழாத ஆறலை கள்வர்கள் அங்கே இருக்கிறார்கள். ‘உயர்ந்தோங்கிய யா மரத்தின் அரிய சுவடுகளுக்கிடையே உயர்ந்த கிளையில் உள்ள தன் குஞ்சுகளுக்காகக் கழுகு உணவு தேடி எடுத்துச் செல்லுமாம். போரில் மாண்டோரின் கண் தசையை எடுத்துச் சென்று குஞ்சுகளுக்கு ஊட்டும்போது, தசை வழுக்கி வாய்தவறிக் கீழே விழும். மிகுபசியால் அத்தகைய கொடிய பாலை வழியும் நமக்கு எளிய வழிதான். ஆனால் துணைவியைப் பிரிந்து செல்வதுதான் அரிதாக இருக்கிறது’15 என்று தலைவன் வீட்டிலிருந்து துணைவியோடு இன்பமாய் வாழ்வதைவிடச் சிறந்தது ஒன்று இல்லை என உரைக்கும் பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன. இவை பாலை வழியின் கடுமையை தெரிவிக்கின்றன.
செலவழுங்கல் சிறிதளவே குறுந்தொகையில் இடம்பெறினும் அது காதல் சிறப்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவன், தலைவி ஆகியோர் துயரங்கள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. பிறர் வருத்தங்கண்டு இரங்கும் மனப்பான்மையுடைய மக்கள் அகத்துறையில் சிறந்து விளங்கினர்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை

குறிப்புகள்:
1. பரிமேலழகர் உரை, திருக்குறள், 1151.
2. கழக அகராதி.
3. ஆ. சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி.
4. சென்னைப் பல்கலைக்கழக அகராதி.
5. தொல். பொருள். கற்பியல், நூ.44.
6. அகப்பொருள் விளக்கம், ப. 45.
7. வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப. 82.
8. மு. வரதராசன், ஓவச்செய்தி, ப. 26.
9. அ. மாணிக்கனார், ஐங்குறுநூறு, ப. 161.
10. வெள்ளைவாரணர், தொல்காப்பியம்-கற்பியல் உரை, நூ.235.
11. கா.ர. கோவிந்தராச முதலியார், அகப்பொருள் விளக்க உரை, நூ. 87.
12. மேலது., நூ. 88.
13. குறுந்தொகை, பா. 27.
14. மேலது., பா. 71.
15. மு. வரதராசன், ஓவச் செய்தி, பக். 55-56.
Comments
Post a Comment