குறுந்தொகையில் செலவழுங்கல் வே. அழகுமுத்து சங்கத் தமிழ் அகப்பொருள் நூல்களுள் குறுந்தொகை ‘நல்ல குறுந்தொகை’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. அகத்துறை சார்ந்த ஒழுக்கங்கள் இதன்கண் இடம்பெற்ற நானூறு பாடல்களிலும் பதிவாகியுள்ளன. பாடல்கள் அளவில் சிறிதாயினும் (அடிவரையறை)பொருட் சிறப்பில் குறைவிலாப் பாடல் தொகுதி கொண்டது இந்நூல். தமிழில் இலக்கியக் கொள்கை வகுக்கப்படுவதற்குப் பெரிதும் துணை செய்யும் தொல்காப்பிய இலக்கண ற்பாக்களுக்குப் புலவருலகம் குறுந்தொகைப் பாடல்களைச் சான்றாகக் காட்டுவது இந்நூற் சிறநூப்பைப் புலனாக்கும். அகப்பொருள் துறைகள் பல இந்நூற் பாடலில் பதிவாகியிருப்பினும் ‘ஒரு துறை’ விளக்கமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளதால் ‘செலவழுங்கல்’ என்னும் துறையொன்றே பகுதிப் பொருளாக (Partial) விளக்கப் பெறுகின்றது. தலைவன் பிரிவு ‘ ஆற்றொணாத்துயர்’ என்ற அளவுக்குத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகின்றது. பிரிவுத் துயர் மிகுதிப்படினும் தலைவி ஆற்றியிருக்க வேண்டும் என முல்லை நிலத்தொழுக்கம் வற்புறுத்துகிறது. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்லரவு வாழ்வார்க் குரை என்னும் குறள், பிரிவால் இறந்து படுவாள் தலைவி என...
Comments
Post a Comment