என் கல்லூரி நாட்கள்
என் கல்லூரி நாட்கள்
உன் பிறந்த நாளிற்காண
வாழ்த்துக்களுக்கு
வார்த்தைக் கிடைக்காது
வருத்தம் கொண்டேன்
பின்பு ஞாபகம் வந்த்து
உன் பெயர்
உன் அந்த ஐந்து
நாட்களை நான்
ஞாபகம் கொண்டபோது
உன் நாணத்தோடு சேர்ந்த
நம் நட்பைக் காட்டியவள் நீ.
நாம் சேர்ந்து நடந்த
சாலையின் ஓரத்திலுள்ள
செடிகளில்
பூக்கள் என்றுமே
உதிர்ந்த்தில்லை.
எண்ணங்களை
வாங்கிக் கொள்பவள்
காதலியாகிறாள்.
அதற்கு
வண்ணம் சேர்ப்பவள்
மட்டுமே
தோழியாகிறாள்
எனக்குப் பிடித்த
ஆடையை மறவாமல் உடுத்தி வருகிறாய்
நானும் அப்படித்தான்.
இருவரும் எதார்த்தமாய்
தேர்ந்தெடுத்த ஒற்றுமை
அந்த நிறத்திலும்
நம் நட்பை மேம்படுத்திக்
கொண்டுதான் இருக்கிறது.
போகிற இடத்தில்
என்னைவிட
அழகாக, அறிவாக
ஒருவர் இருப்பின்
அந்த அச்சம்
நம் நட்பிற்கில்லை.
ஆசிரியர்
தன் பாடங்களை
நம் முன்னிருத்தும் பொழுதும்
நம் துண்டு சீட்டுகளில்
நிறைந்து நிற்கின்றன்
கேள்வி பதில்கள்
நாம்
நண்பர்கள் ஆகாவிட்டால்
நிறைய வார்த்தைகளை
அறியாதிருந்திருப்போம்.
எங்களுக்குள்
நாங்கள்
எப்போதும்
தோற்றுப்போவதில்லை.
படங்களின் பெயர்கள்
பாடல்களின் வரிகள்
நம் வார்த்தை
ஜாலங்களுக்கு என்றும்
நிறைந்து கிடந்தவை.
படியில்
உட்கார்ந்த
அந்த இரயில் பயணத்தில்
நிறுத்தங்கள் எங்கள்
வாத்தைக்கில்லாது
இரயிலுக்கு மட்டும் இருந்தது.
விழியில் விழிமோதினால்
இதயக் கதவுகள் திறக்கும்
பிறகு மூடும். ஆனால்
மனதோடு மனம்,
மோதினாலும் மொட்டினாலும்
திறந்தே இருக்கிறது.
மீள முடியாத
சொர்க்கம்
எனக்கு
உன் மீதான
காதல்.
இதற்கு முன்
அறிந்தது இல்லை
நான் எதற்கும்
குறைந்தவன்
என்று.
Comments
Post a Comment